உலக சுழற்சியின் 5000 ஆண்டுகள்
காலச் சக்கரம் என்பது நான்கு காலத்தை குறிப்பதாகும். இக் காலங்கள் சதா சுழன்று கொண்டிருக்கும் . இது ஆரம்பமும் முடிவும் இல்லாதது. ஒரு நாளினை காலை, மதியம், மாலை, இரவு என நான்கு பகுதிகளாக பிரிக்கின்றோம். அது போல இக் கால சக்கரத்தையும் நான்கு பகுதிகளாக பிரிக்கலாம். அது சத்யுகம் , திரேதாயுகம் , துவாபரயுகம் கலியுகம் என்பதாகும். இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு கல்பம் எனப்படுகிறது. இதில் ஒவ்வொரு பகுதியையும் யுகம் என அழைக்கப்படுகிறது. இந்த சக்கரம் ஒரு முழு சுற்று சுற்றுவதற்கு 5௦௦௦ வருட காலம் எடுக்கிறது. பின் அதனுள் பிரிந்துள்ள ஒவ்வொரு யுகமும் முறையே 1250 வருடங்களைக் கொண்டதாகிறது.

பொற்காலம் (சொர்க்கம்)
முதன் முதலில் வருவது சத்யுகம். இதனை பொற்காலம் என போற்றப் படுகிறது.. இது உயர்ந்ததிலும் உயர்ந்த தூய்மையான உலகமாகும் .சுகமும் அமைதியும் நிறைந்த பூஞ்சோலையாக இருந்தது. இயற்கையும் விலங்கினங்களும் கூட சாத்வீகமாக இருந்தது. சதா ஆட்டம் பாட்டம் கொண்டடதுடன் வாழ்வார்கள். அத்தகைய மகிழ்ச்சி நிரைந்த உலகம். இங்கு மனித ஆத்மாக்கள் அனைவரும் 100 % தெய்வீக குணங்களோடும் சதோ பிரதானமாகவும் வாழ்ந்தனர். இவர்கள் 16 தெய்வீக கலைகள் நிரம்பியவர்களாக இருந்தனர். இங்கு ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனின் ராஜ்யம் இருந்தது. அப்போது இந்த உலகம் சொர்கமாக திகழ்ந்தது . இந்த யுகத்தின் 1250 வருடங்களில் இவர்களில் 8 பிறவி மட்டுமே எடுக்கின்றனர். அதனால் இவர்களின் ஆயுள் சராசரியாக 156 வயது வரை இளைமையோடு வாழ்கின்றனர் . இவர்களை சூரிய வம்சத்தினர் என்று அழைக்கப்படுகின்றனர்.
வெள்ளி வயது
இதனை வெள்ளியுகம் எனவும் அழைக்கலாம் .இவ் யுகத்தையும் சொர்க்கம் என்றே கூறலாம் . இங்கு மனித ஆத்மாக்களும் இயற்கையும் பறவைகளும் விலங்குகளும் மற்ற அனைத்தும் 8௦% தூய்மையாக இருந்தன . இங்கு ஸ்ரீ ராமன் சீதையின் ராஜ்ஜியம் இருந்தது. இந்த யுகத்தின் 1250 வருடங்களில் இவர்கள் 12 பிறவிகள் எடுக்கின்றனர் . ஏனெனில் ஆத்மா பிறவி எடுக்க எடுக்க கலைகள் குறைய ஆரம்பிக்கின்றன . இங்கு ஆத்மாகக்ளுக்கு 14 தெய்வீக கலைகள் மட்டுமே உள்ளது . இவர்கள் சந்திர வம்சத்தினர் என்று அழைக்கப்படுகின்றனர். சத்ரிய குலத்தை சேர்ந்தவராகின்றனர் . இங்கு வெள்ளியே அதிகமாக உபயோகம் செய்யபடுகிறது .மக்கள் தொகை முப்பது முக்கோடியாக இருந்தது. இவர்களையே பக்தி மார்கத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் என அழைக்கப் படுகின்றனர்..இந்த யுகத்திலும் ஒரு தர்மம் ஒரு ராஜ்ஜியம் ஒரு மொழியே இருந்தது
தாமிர வயது
இது தாமிர யுகம் என்று அழைக்கப்படுகிறது .இங்கு மனித ஆத்மா தன்னை ஆத்மா என்பதை மறந்து 75% தேக உணர்விற்கு வர ஆரம்பிக்கிறது. இதன் காரணத்தினா ல் ஆத்மாவிற்கு 8 தெய்வீக கலைகள் மட்டுமே இருகிறது. இந்த நிலையில் ஆத்மா 50% தூய்மையில் வாழ்கிறது. இந்த யுகத்தில் தான் தீயகுணங்கள் நுழைகின்றன .மேலும் நரகம் துளிர் விட ஆரம்பமாகிறது .
மனித ஆத்மா தனது உண்மை தன்மையை மறந்ததால் ஆத்மா துக்கத்தை அனுபவிக்க ஆரம்பிக்கிறது .இச் சமயத்தில் தான் பக்தி உருவாகிறது .இங்கிருந்து தான் கோவில்கள் கட்டப்படுகிறன. .பூஜைகளும் ,சம்பிரதாயங்களும் அரங்கேறுகிறது முதன் முதன் முதலில் ஆரம்பமானது தூய்மையான பக்தி. அதுவே சிவ பக்தியாகும். .இங்கு 1250 வருடங்களில் ஆத்மா 21 பிறவிகள் எடுக்கிறது . இவர்கள். வைசிய குலத்தை சேர்ந்தவராகின்றனர் இங்கு தான் அதர்மம் மெல்ல மெல்ல தலை தூக்குகிறது..இங்கு பல மொழிகளும் பல தர்மங்களும் பல ராஜ்ஜியங்களும் உருவெடுத்தன .
இரும்பு யுகம்
இதனை இரும்பு யுகம் என அழைக்கலாம் .இக்கலியுகத்தில் ஆத்மாவானது 1௦௦ % தூய்மை இழந்து தன்னை முழுமையாக தேகம் என நினைத்து வாழ ஆரம்பிக்கிறது. ஐந்து புலன்களுக்கும் அடிமையாகிறது. அதனால் இவர்கள் சூத்திரர் என அழைக்கப்படுகின்றனர். இங்கு செய்யும் பக்தி தமோ பிரதானமானது. அதாவது பக்தி வியாபாரம் ஆகிவிட்டது. இதனால் துக்கம் அதிகரிக்கிறது .ஆத்மா அமைதியை தேடி அலைகிறது. ஆத்மா தன் தந்தை பரமாத்மாவை பற்றி அறிந்து கொள்ளாமல் அமைதியை அடைய முடியாது. இதனால் இவ்வுலகில் எங்கு பார்த்தாலும் குழப்பங்களும் துக்கமும் சூழ்ந்து கொள்கின்றன. சண்டை சச்சரவு நீடிக்கின்றன. இங்கு ஆத்மா 42 பிறவிகளை எடுக்கின்றன. அதாவது இங்கு ஒரு மனிதனின் ஆயுள் காலம் ஏறக்குறைய 30 வயது அல்லாது அகால மரணம் ஏற்படுகிறது. இங்கு தெய்வீக கலைகள் எதுவும் இல்லை. பூஜ்யம் 0 % ஆகும். . கலியுகத்தின் இறுதியில் எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை , கற்பழிப்பு ,ஏமாற்று போன்ற அனைத்தும் நடந்தேறுகிறது. .இவ்வாறு அதர்மம் தலைத்தூக்கும் போது தான் இறைவன் அவதாரம் எடுக்கிறார்
சங்கம நேரம்
இது வைரயுகம் என்று அழைக்கப்படுகிறது .கலியுகத்திற்கும் சத்யுகத்திற்கும் இடைப்பட்ட யுகமே சங்கமயுகமாகும். பழைய உலகம் கலியுகம் முடிவு மற்றும் புதிய யுகம் சத்யுகம ஆரம்பம். இவ் இரண்டிற்கும் உள்ள இடப்பட்ட நேரமாகும். மிக குறுகிய காலம்..இச் சமயத்தில் தான் இறைவன் சிவன், பிரம்மாவின் உடலில் பரகாய பிரவேசம் செய்கின்றார் . அவர் அப்படி அவதரித்து மீண்டும் தன் குழந்தைகளாகிய மனித ஆத்மாக்களுக்கு தெய்வீக் இறை ஞானத்தை கொடுக்கிறார். நம் அனைவரையும் தூய்மை படுத்துகிறார். ஆத்மாவும் பரமாத்மாவும் நேரடியாக சந்திக்கும் இந்த யுகமே சங்கமயுகமாகும் .இங்கு நாம் எடுக்கும் பிறவி 1 மட்டுமே .இப் பிறவியில் அனைவரும் பரமாத்மா சொற்படி நடந்து பழைய உலகத்தில் இருந்து புத்தியை விலக்கி பரம்பொருளாகிய இறைவன் ஜோதி வடிவான சிவனை மட்டும் நினைவு செய்ய வேண்டும். இதனால் முக்தியும் ஜீவன் முக்தியும் அடையப் பெறலாம் .பழைய உலகமும் புதிய உலகமாக மாறிவிடும். பின் .நாம் மீண்டும் சத்யுகத்தில் தேவதையாக மீண்டும் பிறவி எடுக்கலாம்
உலக நாடகம்
இது ஒரு எல்லையில்லா உலக நாடக மேடை..இந்த நாடக மேடையில் தான் நாம் அனைவரும் நடிக்கும் நடிகர்களாக இருக்கின்றோம். ஆக மொத்தம் 84 பிறவிகள் எடுக்கின்றோம். இங்கேயே சொர்க்கம் நரகம் என்பதும் அமைந்திருக்கிறது. மேலும் மனித ஆத்மாக்களின் வெற்றி தோல்வி.
என்கின்ற வாழ்வின் விளையாட்டும் நடக்கிறது. இதன் அடிப்படியில் கர்மா எனும் செயல் அமைகிறது. நன்மை தீமை என்பது இங்கே தான் நடைபெறுகிறது. இதனை ஒவ்வொரு ஆத்மாவும் தெரிந்துகொள்வதன் மூலம் ஆனந்தம் பெற முடியும்.அடுத்து கர்மா என்பது என்ன? அது எப்படி செயல் படுகிறது? என்பதையும் தெரிந்து கொள்வோம்
தந்தை கூறுகிறார்: ''ஒவ்வொரு 5000 வருடங்களுக்கும், கல்பாவின் முடிவிலும் (கல்யுக்கின் முடிவிலும், சத்யுக்கின் தொடக்கத்திலும்), நான் உங்களிடம் அதே அறிவைப் பேச வருகிறேன், இதன் மூலம் உங்களை துக்கத்திலிருந்து விடுவித்து, பொற்காலத்தை பின்பற்றுகிறேன் (சத்யுக்) உங்கள் முயற்சிக்கு ஏற்ப (நீங்கள் எந்த அளவிற்கு ஸ்ரீமத்தை பின்பற்றினீர்கள்). " நித்திய நாடகம் (இந்த நாடகம் நித்தியமானது)''